உதகை 200...மாபெரும் புத்தகத் திருவிழா...திறந்து வைத்தார் ஆ.ராசா!

உதகை 200...மாபெரும் புத்தகத் திருவிழா...திறந்து வைத்தார் ஆ.ராசா!

உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மாபெரும் புத்தகத் திருவிழா இன்று தொடங்கி நடைபெற்றது.


கடந்த 1819 ஆம் ஆண்டு அப்போதைய கோயம்புத்தூர் கலெக்டராக இருந்த ஜான் சலீவன் உதகைக்கு வருகை தந்து ஜூன் மாதத்துடன் 200 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனைக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கலைத் திருவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளது. 

அதன்படி, கலைத் திருவிழாவில் முதல் நிகழ்ச்சியாக இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தகத் திருவிழாவை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா துவக்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து உதகை 200 லோகோவை வெளியிட்டார்.

இதையும் படிக்க : 24 மணி நேரம் காலவகாசம்...திராணி இருந்தால் என்மீது கை வையுங்கள்...திமுக அரசுக்கு அண்ணாமலை சவால்!

இந்த புத்தகத் திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடியின மக்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள், மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த புத்தகங்கள், அனைத்து துறை சார்பிலும் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு துறையின் சிறப்புகள் குறித்தும்  விளக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வனத்துறையின் மூலம் வனவிலங்குகள் பாதுகாப்பது குறித்த அரங்கு அமைக்கப்பட்டு அதில் பதப்படுத்தப்பட்ட சிறுத்தை, நீலகிரி வரையாடு, மான், கருங்குரங்கு உருவங்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தனியார் பள்ளி குழந்தைகள் பள்ளி மாணவ மாணவர்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.