நாளை 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் நாளை 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் நாளை 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க : தெலங்கானாவின் புதிய முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்...!

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நாளை நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதேபோல், டிசம்பர் 9 ஆம் தேதி திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவித்துள்ளது.