"இந்தியா- பிரிட்டிஷ் இடையே உறவு சிறப்பானது" - அமைச்சர் பொன்முடி

"இந்தியா- பிரிட்டிஷ் இடையே உறவு சிறப்பானது" -  அமைச்சர் பொன்முடி

இந்தியா - பிரிட்ஷ் இடையே உறவு என்பது நீண்ட காலமாக இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலில்  தமிழ்நாடு-பிரிட்டிஷ் நாடுகளுக்கிடையேயான மொழியுறவை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை  தமிழ்நாடு மற்றும் பிரிட்டிஷ் கல்வியல் அறிஞர்கள் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மொழி வட்டமேசை கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களும் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வு இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

மேலும், இந்த உடன்படிக்கையில் தமிழக கல்வியியல் மொழியறிவை மேம்படுத்துவதற்கு பிரிட்டிஷின் பல்கலைக் கழகங்களிலிருந்தும்,பிரிட்டிஷ் மொழி அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கான சிறப்பு கூறுகளை தமிழக கல்வியியல் பல்கலைக் கழகங்களிலிருந்தும் பெற்றுக் கொள்வதே முதன்மை நடவடிக்கையாக கையெழுத்திடப்பட்டது.

 அமைச்சர் பொன்முடி மேடைப் பேச்சு :-

இந்தியா பிரிஸ்ட்ஷ் இடையே உறவு என்பது நீண்டகாலமாக இருக்கிறது. கல்வி மற்றும் சுகாதாரம் இரண்டு கண்கள் என முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். QUANTITY விட QUALITY அதிகமாக இருக்க வேண்டும் என அரசு விரும்புகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க காலை உணவு வழங்கினாலும் மாணவர்களின் கல்வி திறனை வளர்க்க நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீண்ட காலமாக இரு மாநில கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கருணாநிதி கடந்த 2007 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த நேரத்தில் முதல் முறையாக பிரிட்டிஷ் கவுன்சிலை பார்வையிட்டார்,பிரிட்டிஷ் கவுன்சிலை முதல் முறையாக பார்வையிட்ட முதல்வர் அவர்.ஏற்கனவே கல்லூரி துணை வேந்தர்கள் இடையே நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் வெளி நாடுகளில் உள்ள பல்கலைகழகங்களுடன் இணைப்பு வைத்துகொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள கூறி இருந்தேன்.

அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைகழகம் மற்றும் கோயம்பத்தூர் பல்கலைகழகம் வெளிநாட்டை சார்ந்த கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளனர் இதன் மூலம் இங்கிருந்து மாணவர்கள் அங்கு செல்லவும் அங்கிருந்து ஆசிரியர்கள் இங்கு வரவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பு: 

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்காக  ஆங்கில மொழி பேசுவதற்கான  முன்னெடுப்புகளை அரசு எடுத்து வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம்  தமிழ்நாடு மற்றும் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் உடனான  உறவை மேம்படுத்தலுக்கான வளர்ச்சியை முன்னெடுக்க உள்ளோம்.

அதன் மூலம் தமிழகத்தில் இருக்கிற அண்ணா பல்கலைக்கழகம் கோவை பல்கலைக்கழகம் பன்னாட்டு பல்கலைக்கழகங்களோடு உடன்படிக்கை செய்து கல்வி வளர்ச்சி சிறப்பு முயற்சியாக எல்லா பல்கலைக்கழகங்களும் இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள மொழி உறவை வளர்க்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். அதன் மூலம் வேலை வாய்ப்பை உறுதி செய்யவும் மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தவும்‌ முடியும்.”, எனக் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com