வானகரத்தில் நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டம்...பேனர்கள் கட்அவுட்டர்கள் அமைக்கும் பணி தீவிரம்!

அதிமுக பொதுக்குழு நடக்கும் வானகரம் தனியார் மண்டபத்தில் பேனர்கள் கட்அவுட்டர்கள்  அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வானகரத்தில் நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டம்...பேனர்கள் கட்அவுட்டர்கள்  அமைக்கும் பணி தீவிரம்!

நாளை மறுதினம் வானகரத்தில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? நடைபெறாத என பல்வேறு பேச்சுகள் எழுந்து வரும் நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பணிகளைத் தீவிரமாக செய்து வருகிறார். பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்தில் முன்பு பேனர்கள் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த முறை சசிகலாவை பொது செயலாளராக தேர்வு செய்யும் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா சசிகலாவுக்கு பூங்கொத்து கொடுப்பது போன்று பேனர் வைக்கப்பட்டது. அதே போன்று தற்போது ஓபிஎஸ்க்கு இபிஎஸ்சும், இபிஎஸ்க்கு ஓபிஎஸ்சும் பூங்கொத்து கொடுப்பது போன்றும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் பொறித்த தனித்தனி  பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வானகரத்தில் நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்க கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்தில்  ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.