கொடநாடு கொலை வழக்கு விவகாரம்: ஜெயலலிதாவின் ஓட்டுநரிடம் சிபிசிஐடி விசாரணை..!

கொடநாடு கொலை வழக்கு விவகாரம்:  ஜெயலலிதாவின் ஓட்டுநரிடம் சிபிசிஐடி விசாரணை..!

கோவை பிஆர்எஸ் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  ஓட்டுநர் ஐயப்பன் என்பவரிடம்  சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, 200-க்கும் மேற்பட்டவர்களிடம் கொலை மற்றும் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் ஓட்டுநர் கனகராஜன் சகோதரர் தனபாலிடம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.

இன்னிலையில், தற்போது கோவை பிஆர்எஸ் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஓட்டுநர் ஐயப்பனிடம்  சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்து ஐயப்பன் கூறும் பொழுது :-
 “உதகையில் உள்ள தனிப்படை போலீசார் என்னிடம் விசாரணை செய்துள்ளனர். தற்போது இரண்டாவது முறையாக கோவை பிஆர்எஸ் மைதானத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை செய்து ”,என தெரிவித்தனர்.

இதையும் படிக்க   |  “திமுக குடும்பத்தை எதிர்த்து திரைத்துறையினர் கேள்வி கேட்க வேண்டும்” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்