ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகள்...! போக்குவரத்து மாற்றம்...!!

ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகள்...! போக்குவரத்து மாற்றம்...!!

ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற உள்ளதால் ஒரு வார காலத்திற்கு ஆற்காடு சாலையில்  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆற்காடு சாலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பணிகள் மேற்கொள்ள உள்ளதால் 06-05-2023ம் தேதி முதல் 12.05.2023ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் ஆற்காடு சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: சுரங்கப் பாதை பணிகள்  விரைவில் தொடக்கம் | Phase II Metro Rail Project in Chennai - hindutamil.in

ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்தியா காலனி 1வது பிரதான சாலை சந்திப்பிலிருந்து டாக்டர் அம்பேத்கர் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் மாநகர் பேருந்துகள் நேராக டாக்டர் அம்பேத்கர் சாலைக்கு ஆற்காடு சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேற்கண்ட வாகனங்கள் யுனைடெட் இந்தியா காலனி 1வது பிரதான சாலை, விஸ்வநாதபுரம் பிரதான சாலை ரங்கராஜபுரம் பிரதான சாலை மற்றும் ரத்தினம்மாள் தெரு வழியாக செல்லலாம்.Metro work triggers traffic snarls in Chennai; Arcot Rd turns obstacle  course | Chennai News - Times of India

இதில், வடபழனியில் இருந்து ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். யுனைடெட் இந்தியா காலனி 1வது பிரதான சாலையில் ஆற்காடு சாலை சந்திப்பிலிருந்து ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பிலிருந்து நேராக ஆற்காடு சாலைக்கு செல்ல தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள் யுனைடெட் இந்தியா காலனி 1வது பிரதான சாலை, 2வது குறுக்கு தெரு, சர்குலர் சாலை, யுனைடெட் இந்தியா காலனி 6வது குறுக்கு தெரு மற்றும் 4வது பிரதான சாலை வழியாக செல்லலாம்.CMRL speeds up construction in corridor 4 with 27 stations

விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் தி.நகர் செல்ல ஸ்டேஷன் வியூ சாலை மற்றும் பசுல்லா மேம்பாலம் வழியாக செல்லலாம். டாக்டர் அம்பேத்கர் சாலையில் ஒரு வழி பாதை ஆற்காடு சாலை சந்திப்பிலிருந்து 2வது அவென்யூ வரை தற்போது அமுலில் உள்ளது. மேற்கண்ட சாலையில், ரத்தினம்மாள் தெரு சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலை சந்திப்பு வரை இருவழிபாதையாக மாற்றப்படுகிறது.  ரத்தினம்மாள் தெருவில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் சாலை, கார்ப்பரேசன் காலனி சாலை மற்றும் பாளையக்காரன் தெரு வழியாக ஆற்காடு சாலைக்கு சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

மேலும், இது குறித்த சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதையும் படிக்க:"கேரளா ஸ்டோரி" தடை செய்ய சீமான் வலியுறுத்தல்...!!