அம்மா மினி கிளினிக் பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்........அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அம்மா மினி கிளினிக் ஒரு குறுகிய கால திட்டம் என்றும் அங்கிருந்த பணியாளர்கள் தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அம்மா மினி கிளினிக் பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்........அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியதாவது, தடுப்பூசி செலுத்துவதில் கோவை மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது என்றும் 93 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் 37 சதவீதத்தினர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், அம்மா கிளினிக் ஒரு குறுகிய காலத் திட்டம் அந்த திட்டம் முடிவடைந்து விட்டது என தெரிவித்த அவர், அம்மா கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்கள் தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.