முஸ்கானைப் போல் எதையும் எதிர்க்க வேண்டும்..! மதிமுக பொதுசெயலாளர் வைகோ ...!

முஸ்கானைப் போல் எதையும் எதிர்க்க வேண்டும்..! மதிமுக பொதுசெயலாளர் வைகோ ...!

கர்நாடக ஹிஜாப் விவகாரத்தில் தன்னை சுற்றி நின்று ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டவர்களுக்கு எதிராக அல்லாஹு அக்பர் என முழக்கமிட்ட, முஸ்கானைப் போல் எதையும் எதிர்க்க வேண்டும் என்கிற தைரியத்தோடு இந்து மதவாத சக்திகளை எதிர்த்து வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார்.

சி.ஏ.ஏ, ஹிஜாப் என சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் இத்தகைய நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு சமூகநீதி நிலைத்திட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயத்தை நிலைநிறுத்த வேண்டும்' என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக சிறுபான்மையினர் அணி சார்பாக சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ரமலான் மாத இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உள்ளிட்டோர்  பங்கேற்று நோன்பு திறந்தனர். இந்நிகழ்வில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று ரமலான் மாத நோன்பை திறந்தனர்.

சிங்கமாக கர்ஜித்தவர் வைகோ;.. 

இந்நிகழ்ச்சியில்  நாடாளுமன்ற உறுப்பினர்  நவாஸ்கனி பேசியபோது:..
"அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்கள் சட்டத்தின் மூலமாக இந்த சமூகத்தை ஒடுக்க நினைக்கின்ற போது, அவர்களிடம் உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த சமூகத்திற்கு எதிராக சட்டங்களை கொண்டு வரும்போது பாராளுமன்றத்திலே ஒரு சிங்கமாக கர்ஜித்தவர் வைகோ . பாரளுமன்றத்தில் கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு அரணாக  இருந்தவர் வைகோ. சிறுபான்மையிருக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை வைகோ எதிர்த்தது போல நாளை துரை வைகோவும் பாராளுமன்றத்தில் எதிர்ப்பார்.

நூற்றாண்டிலேயே இப்படி ஒருவரை காணாத வகையில் வைகோ போராடி வருகிறார். வைகோவின் சட்டப் போராட்டங்களுக்கு, போராட்டங்களுக்ஜு மக்களும் துணை நின்றிருந்தால் தமிழகத்தில் இருந்து மக்கள் விரோத திட்டங்களை எல்லாம் விரட்டியிருக்க முடியும். அவரோடு இணைந்து செயல்பட வேண்டும் என்கிற ரீதியில் செயல்பட்டு வருகிறோம். திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள்தான் இஸ்லாத்தின் கோட்பாடுகள். ஒரு ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ சமுதாயத்தை படைக்க வேண்டும் என்கிற திராவிட கோட்பாடு தான் இஸ்லாமிய கோட்பாடு",  எனத்  தெரிவித்தார்.

இதனையடுத்து மேடையில் பேசிய மதிமுக தலைமை கழக செயலாளர் 'துரை வைகோ', 
 "இஸ்லாம் என்பதற்கு - 'கீழ்படிதல்', 'கட்டளைகளை நிறைவேற்றுதல்' என்று பொருள். 
அல்லாவுக்கு அடிபணிந்து அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுவது நிரம்பி உள்ளதால் இஸ்லாம் என பெயரிடப்பட்டுள்ளது. கலிமா, தொழுகை, நோன்பு உள்ளிட்ட 5 கடமைகளை இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கிறார்கள். 

இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் உலகத்தின் சமநிலையை பேன உருவாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இஸ்லாத்தில் சாதி இல்லை. ஒருவர் பிறப்பால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை இல்லை. பொருளாதாரத்திலும் இஸ்லாம் சமநிலையை பேணுகிறது. 

இன்றையை காலகட்டத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். மதநல்லிணக்கம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். பல்வேறு இனங்களை, சாதிகளை கொண்ட இந்தியாவில் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வால் ஒன்றுபட்டுள்ளோம். வேற்றுமையில் ஒற்றுமை என்று உருவாக்கப்பட்ட இந்தியாவை இந்தியா, இந்துக்களுக்கே என இந்து ராஷ்டிரத்தை உருவாக்க ஒரு கூட்டம் முயல்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகின்றனர். சி.ஏ.ஏ, ஹிஜாப் என சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் இத்தகைய நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சமூகநீதி நிலைத்திட மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயத்தை நிலைநிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து மேடையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 

உலகெங்கும் ஈஸ்டர், இப்தார் நிகழ்ச்சிகள் ஒரே நாளில் நடைபெறுகிறது. சிலுவையில் அறைந்து ரத்தம் சொட்ட 3ம் நாளான இன்று இயேசு உரிதெழுந்ததையொட்டி ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. சிறுபான்மை மக்கள்களான கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் கொண்டாடும் நாள். 

இஸ்லாம் மக்களை துன்புறுத்துகிறார்கள்:...

ரத்தம் சிந்தி நிலைநிறுத்தப்பட்ட இஸ்லாம், இன்றைக்கும் ரத்தம் சிந்தும் நிலையில் இல்லை. ஆனால், இஸ்லாமியர்களை தூண்டிவிடும் வகையில் மதவாத சக்திகள் செயல்படுகின்றன. இஸ்லாம் மக்களை தற்போது மதவாத சக்திகள் எவ்வளவு துன்பப்படுத்த முடியுமோ அவ்வளவு துன்பப்படுத்தப்படுகிறார்கள். கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு தடை விதிக்கிறார்கள். 
அதனையும் மீறி ஹிஜாப் அணிந்துக் கொண்டு வந்த பெண்ணை சூழ்ந்து கொண்டு இந்து ராஷ்டிராத்தை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள்  ஜெய்ஸ்ரீராம் என கத்தினார்கள். அதனை எதிர்த்து முஸ்கான் என்ற இளம்பெண் அல்லாஹு அக்பர் என முழக்கமிட்டார். முஸ்கானைப் போல் எதையும் எதிர்க்க வேண்டும் என்கிற தைரியத்தோடு இந்து மதவாத சக்திகளை எதிர்த்து வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.

 இதையும் படிக்க ;...

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்டறிய கேமராக்கள்..! குறுஞ்செயதி மூலம் எச்சரிக்கை ...! https://www.malaimurasu.com/CCTV-cameras-has-been-installed-in-Iran-to-monitor-women-not-wearing-hijabs