நீட் தேர்வு; "திமுக நாடகமாடுகிறது" எடப்பாடி குற்றச்சாட்டு! 

நீட் தேர்வு; "திமுக நாடகமாடுகிறது" எடப்பாடி குற்றச்சாட்டு! 

நீட் நுழைவுத் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு தொடர்ந்து நாடகமாடி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, நாடே வியக்கும் வகையில் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக எழுச்சி மாநாட்டை கண்டு திமுகவினர் அச்சம் கொண்டுள்ளதாக கூறினார். இதன் எதிரொலியாகவே திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்குக்கு முதல் கையெழுத்திடுவோம் என பொய் வாக்குறுதி அளித்து, திமுகவினர் மக்களை ஏமாற்றி விட்டதாக விமர்சித்தார். மேலும், எதிர்கட்சியினரின் இந்தியா கூட்டணி மூலம் நாடாளுமன்றத்தில் கூட திமுகவினர் குரல் எழுப்பவில்லை என்றார். ஆனால், நீட் விவகாரத்தில் ஆளுநர் மீது குற்றம்சாட்டி, திமுகவினர் தொடர்ந்து நாடகமாடி வருவதாகவும் அப்போது அவர் கூறினார்.

நானும் டெல்டாகாரன் தான் எனக்கூறிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கான தண்ணீரை கர்நாடக அரசிடம் பெற்றுத் தரவில்லை என்றார். இதனால், டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு உரிய அனுமதி பெற்றுள்ள நிலையில், மாநாட்டிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக  கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com