திருமண மண்டபங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!!

சென்னையில் உள்ள திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்கள் குறித்த விவரத்தை சென்னை மாநகராட்சி இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய திருமண மண்டப உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
திருமண மண்டபங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!!
Published on
Updated on
1 min read

சென்னையில் உள்ள திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்கள் குறித்த விவரத்தை சென்னை மாநகராட்சி இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய திருமண மண்டப உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னையில் கொரோன தொற்று மூன்றாவது அலை தொடங்குவதற்கு முன்னதாகவே அதனை தடுப்பதற்கும் அதனால் ஏற்படும் பாதிப்பினை குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் சென்னையில் உள்ள திருமண மண்டபம், பார்ட்டி ஹால்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்கள் மற்றும் அதன் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில், கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் 50 நபர்களுக்கு மிகாமல் திருமணம் நடத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.   இந்நிலையில் திருமண மண்டபங்கள், பார்ட்டி ஹால்கள் உள்ளிட்ட அரங்குகளில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி மற்றும் அதன் விவரங்களை சென்னை மாநகராட்சி இணையதளத்தில் முறையாக முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி மண்டப உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோன பெருந்தொற்று அதிக நபர்கள் கூடும் இடங்களில் பரவுவதற்கு அதிக வாய்புள்ளதால், இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அதில் கொரோன தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்ற படுகின்றனவா என்பதை கண்காணிப்பது அவசியம் அதற்கு எங்கு என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்பதினை மாநகராட்சி அறிந்து கொள்ள இது போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே உரிமையாளர் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இது போன்ற இடங்களில் பணிபுரிய கூடியவர்களுக்கு மாநகராட்சி முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தி வருகிறது. மண்டபங்களில் பணிபுரிவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

திருமண நிகழ்ச்சி நடைபெறும் நாளினில் அரசு கொடுத்துள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி நிகழ்ச்சி நடைபெறுவதை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் எனவும் அப்போது முன்கூட்டியே பதிவு செய்யப்படாது திருமணங்கள் நடைபெறுவது தெரியவந்தால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி அபராதம் விதித்து தேவைப்பட்டால் சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com