விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய 3 ஆயிரத்து 232 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
சென்னை முழுவதும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் விதிகள் மீறி வைக்கப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சர்த்கர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இதையும் படிக்க : ஓபிஎஸ்சின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது...!
அந்த அறிவிப்பின்படி, சென்னை மாநகரம் முழுவதும் இந்த அதிரடி வேட்டை நடைபெற்றது. இதில் விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய 3 ஆயிரத்து 232 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.