”ஓபிஎஸ் அதிமுகவை அழிக்க நினைக்கும் துரோகி” - சி.வி.சண்முகம் விமர்சனம்!

”ஓபிஎஸ் அதிமுகவை அழிக்க நினைக்கும் துரோகி” - சி.வி.சண்முகம் விமர்சனம்!

அதிமுகவை அழிக்க நினைக்கும் ஓ.பன்னீர் செல்வம் ஒரு பச்சோந்தி மற்றும் துரோகி என்று எம்.பி சி.வி.சண்முகம் சாடியுள்ளார். 

மதுரையில் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டில் பங்கேற்பது குறித்த விருதுநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. 

இதையும் படிக்க : 4 ஆவது நாளாக தொடங்கிய என்.எல்.சி. பணிகள்...!

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, வளர்மதி  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்நிலையில் கூட்டத்தில் பேசிய எம்.பி சி.வி. சண்முகம், இந்த மாநாடு அதிமுகவை அழித்து விடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கக் கூடிய பச்சோந்திகளுக்கும், துரோகிகளுக்கும் எதிரானது என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஓபிஎஸ் ஐ தாக்கி பேசினார்.