தீபாவளியையொட்டி மாம்பலம் ரயில்நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை..!

தீபாவளியையொட்டி மாம்பலம் ரயில்நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை..!

போலீசார் தீவிர சோதனை

தீபாவளியையொட்டி சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச்செல்வது சட்டப்படி குற்றம் என்பதோடு ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கும் இதன்பேரில் தொடுக்கப்படும்.

ரயில் நிலையத்துக்கே பெரும்பாலானோர் செல்வர்

இந்நிலையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் பயணிகள் பட்டாசுகளை எடுத்துச் செல்கிறார்களா என்ற கோணத்தில் ரயில்வே துறையினர் சோதனையை தீவிரப்படுத்தினர். தியாகராய நகரில் தீபாவளிப் பொருட்களை வாங்கியபின், அருகில் உள்ள மாம்பலம் ரயில் நிலையத்துக்கே பெரும்பாலானோர் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.