வீரமங்கைகளுக்கு வீர வணக்கம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் காவலர்களாக தேர்வாகி சாதனை...

அரக்கோணம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் காவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர் . தாயை இழந்து, தந்தையின் வளர்ப்பில், விடா முயற்சியுடன் காவலர்களாக தேர்வு செய்யப்பட்ட வீர மங்கைகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
வீரமங்கைகளுக்கு வீர வணக்கம்...  ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் காவலர்களாக தேர்வாகி சாதனை...

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோண்ம் அருகே உள்ளது கீழ்ஆவதம் கிராமம். குக்கிராமம் என்று கூட சொல்லும் அளவுக்கு அடிப்படை வசதி கூட இல்லாத இந்த கிராமத்தில் வசித்து வருகிறார் வெங்கேடசன். இளம் வயதில் தனது மனைவியை  இழந்த வெங்கேடசனுக்கு ப்ரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி என 3 பெண் குழந்தைகளும், கார்த்திக்கேயன்  என்ற மகனும் உள்ளனர் . 

4 குழந்தைகளையும் கையில் கொடுத்து விட்டு மனைவி உயிரிழந்த நிலையில் மனம் தளராமல் பிள்ளைகளை வளர்க்க தொடங்கினார் வெங்கேடசன்.. தாய் இல்லாத 3 பெண் குழந்தைகளை தந்தை வளர்ப்பது என்பது பெரும் சவால் என்பதை மாற்றி அவர்கள்  அனைவரையும்  வீர மங்கைகளாக முடி சூடா வைத்துள்ளார் வெங்கேடசன்.

3 பெண் குழந்தைகளும் பட்டப்படிப்பு முடித்து  முழு முயற்சியுடன் காவலர்கள்  தேர்வை எழுத தொடங்கினர். முன்று ஆண்டுகளாக தேர்வில் தொடர் தோல்வி அடைந்த நிலையில் முதல் பெண்ணுக்கு திருமண வயதும் எட்டியது. திருமணத்தையும்  செய்து வைத்து கணவன் ஒப்புதலுடன் தனது  பெண்ணை காவலராக்கும் முயற்சியை தொடர்ந்தார் வெங்கேடசன். 

விடா முயற்சி, விசுவரூப வெற்றி என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களும் தற்போது தமிழக காவல்துறையில்  காவலர்களாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த மாபெரும் வரலாற்று நாள் மூலம் பிறவி பயன் அடைந்துவிட்டதாக ஆனந்த கண்ணீர் விடுகிறார் தந்தை வெங்கடேசன். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com