சட்டமன்ற தேர்தலை வைத்து நாடாளுமன்ற தேர்தலை தீர்மானிக்க முடியாது - கார்த்தி சிதம்பரம் எம்.பி!

சட்டமன்ற தேர்தலை வைத்து நாடாளுமன்ற தேர்தலை தீர்மானிக்க முடியாது -  கார்த்தி சிதம்பரம் எம்.பி!

கா்நாடகாவில் ஊழல் ஆட்சியை அகற்றி நல்லாட்சி வர வேண்டும் என்பதற்காக மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தொிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

இதையும் படிக்க : கர்நாடக முதலமைச்சர் யார்? வாய்ப்பு அதிகம் இருப்பது யாருக்கு? சித்தராமையாவா (அ) சிவகுமரா...

அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் பாஜவின் ஊழல் ஆட்சியை அகற்றி நல்லாட்சி வரவேண்டும் என்பதற்காக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து பெரும் வெற்றியை பெற்று தந்துள்ளனர் என தொிவித்தாா். 

தொடா்ந்து பேசிய அவா், சட்டமன்ற தேர்தலை வைத்து நாடாளுமன்ற தேர்தல் முடிவு அமையும் என்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என தெரிவித்த கார்த்தி சிதம்பரம், காங்கிரசுக்கு இது ஒரு தொடக்கம் என கூறினார்.