இன்று பெரியார் பிறந்த நாள் விழா: தமிழகம் முழுவதும் சமூக நீதி நாள் அனுசரிப்பு!

பெரியாரின் பிறந்தநாளான இன்று, தமிழகத்தில் ’சமூக நீதி நாளாக’ கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்க உள்ளார்.

கடந்த 6ஆம் தேதியன்று சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்தார்.  இந்த நிலையில், பெரியாரின் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியாா் நினைவு இல்லத்திலும், கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியாா் நினைவிடத்திலும், தமிழக அரசின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளது.

மேலும், தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ’சமூக நீதியை அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் பயணம் தொடர, இந்த நாளில் உறுதியேற்பதாக’ தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.