எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் காலி செய்த 90 வயது பாட்டி: 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தலைவரான பெருமாத்தாள்...

நடந்து முடிந்த 9  மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் முடிவில் 90 வயது பாட்டி ஒருவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை டெபாசிட் காலி செய்து ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் காலி செய்த 90 வயது பாட்டி: 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தலைவரான பெருமாத்தாள்...

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தவிர, 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 789 காலியிடங்களும் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

கோவை மாவட்டத்தில் 13 உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் கார் சின்னத்தில் போட்டியிட்ட கோவை வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி துணை தலைவர் கார்த்தி ஒரே ஓரு வாக்கு மட்டுமே பெற்றார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 10ஆவது வார்டில் போட்டியிட்ட அமமுகவை சேர்ந்த வேட்பாளர் சண்முகம் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை. போட்டியிட்ட வேட்பாளர் தன்னுடைய வாக்கு வேறொரு வார்டில் இருந்ததால் தனது ஓட்டை கூட தனக்கு செலுத்த முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது இதனை அனைத்தும் இணையவாசிகள் மீம்களாக போட்டு இணையத்தை தெறிக்கவிட்டனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெருமாத்தாள் என்ற பாட்டி ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் காலி செய்துள்ளார் பெருமாத்தாள் பாட்டி. 90 வயது ஆனாலும் கடும் தீவிரமாக பிரச்சாரம் செய்த பெருமாத்தாள் பாட்டியை அமோக வெற்றி பெற வைத்துள்ளனர் அவரது கிராம மக்கள். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்ட பெருமாத்தாள் பாட்டி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.