தேவர் குரு பூஜை; தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை விழாவையொட்டி பாதுகாப்பு தீ விரப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, அக்டோபர் 28-ம் தேதி ஆன்மீக விழாவும், 29-ம் தேதி அரசியல் விழா நடைபெற்றது. 

இதையடுத்து தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குரு பூஜை விழா திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற உள்ளது. இதனையொட்டி, விமான மூலம் மதுரை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராம லிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர், சாலை மார்க்கமாக பசும்பொன் செல்லும் முதலமைச்சர், தேவரின் குரு பூஜையிலும் பங்கேற்க உள்ளார்.  

இதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, டி.டி. வி. தினகரன், பாஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில், விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுக்கும் வகையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிக்கப்பட்டுள்ளதை யொட்டி, அங்கு துப்பாக்கி ஏந்திய மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 இதேபோல், மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிசிடி வி கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீ விரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: கேரளா வில் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி; தீ விர கண்காணிப்பில் தமிழக போலீசார்!