" ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராட்டம்.." - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்

ஒன்றிய அரசின் தேச விரோத, மக்கள் விரோத போக்கை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் வரும் 30 ம் தேதி 11 இடங்களில் பல்லாயிரம் கணக்கான ஆண்கள் பெண்கள் கலந்து கொள்ளும் மாபெறும் மறியல் போராட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ்

" ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராட்டம்.." - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் எடுத்த தீர்மானத்தின் படி,   ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து வருகிற 30-ஆம் தேதி, தமிழகம் தழுவிய மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த மறியலில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள பொருளாதார கொள்கைக்கு, அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, இப்படி பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் ஏழை எளிய மக்களுக்கு எதிராகவும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனால், பாஜக அரசை கண்டித்து இந்த மறியல் போராட்டம் நடைபெறுகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் பல்லாயிரம் கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளும் இந்த மறியல் போராட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களை செயல்படாமல் மறிக்கப்படும் என தெரிவித்தாா்.