புதுச்சேரி: முதல்முறையாக டிராகன் பழ சாகுபடியில் அசத்தும் பட்டதாரி!!

புதுச்சேரி: முதல்முறையாக டிராகன் பழ சாகுபடியில் அசத்தும் பட்டதாரி!!

புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக டிராகன் பழம் சாகுபடி செய்து பட்டதாரி ஒருவர் அசத்தியுள்ளார்.

விவசாயத்தின் மீதான ஆர்வத்தால் வேலை துறந்த பட்டதாரி

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பட்டதாரி செல்வமணி, விவசாயம் மீது ஏற்பட்ட ஆர்வத்தில் தனியார் நிறுவன வேலையை விட்டு விட்டு விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

பூர்வீக நிலத்தில் டிராகன் செடி சாகுபடி

இந்நிலையில் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிராகன் பழ செடிகளை வாங்கி வந்து தனது பூர்வீக நிலத்தில் சாகுபடி செய்த நிலையில் அமோக விளைச்சல் கண்டுள்ளது.

ஒரு முறை முதலீடு 20 ஆண்டுகள் மகசூல்

புதுச்சேரியில் உள்ள பழக் கடைகளூக்கு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் 20 ஆண்டுகளுக்கு மகசூல் தரும் டிராகன் பழ சாகுபடியில் ஒரு முறை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று செல்வமணி தெரிவித்துள்ளார்.