இபிஎஸ் ஆதரவாளர்களை பழிவாங்கவே ரெய்டுகள்” - எஸ். பி. வேலுமணி

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதவாக செயல்படுவோரை பழிவாங்கும் வகையில் ரெய்டுகள் நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

வடசென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளரான ஆர்எஸ் ராஜேஷின் இல்லத்தில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை கிட்டதட்ட சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்சஒழிப்புதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு சோதனையில் ஏதும் இல்லை என விட்டு சென்றனர்.
 
இந்நிலையில் இன்று ஆர்எஸ் ராஜேஷின் இல்லத்தில் அவரை சந்தித்து  பேசியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்திந்த அவர்
 
அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களை வைத்தே திமுக ஆட்சிசெய்வதாகவும் மதுரையில் நடைபெற்ற"எழுச்சி மாநாடு இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சரித்திர மாநாடாக நடந்தேறியது எனவும் எப்போது சட்டமன்ற தேர்தல் நடந்தாலும்  அதிமுக வெற்றி பெற்றுவிடும் என்பதாலேயே இது போன்ற சோதனைகள் நடைபெறுவதாக கூறினார்.  
 
எடப்பாடியாருக்காக சூழன்று வேலை செய்வர்களை பழிவாங்கும் விதமாக இது போன்ற ரெய்டுகள் நடத்தப்படுகிறது என பேசினார்.