ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி; பொதுமக்கள் அச்சம் !

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மேலும் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி; பொதுமக்கள் அச்சம் !

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் உள்ளது. இங்கு கேரளா, தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். 

அண்மையில் கேரளா சென்று விடுதிக்கு திரும்பிய மாணவர்கள் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உடனே  பரிசோதனை மேற்கொண்டனர். அதில் இருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  

பின்னர் தோற்று உறுதி செய்யப்பட்ட  2 மாணவர்களும் தண்டலம் தனியார் மருத்துவமனையிலும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் இவர்களுடன் தொடர்பில் இருந்த 235 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்,  தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் பயிலும்  29 மாணக்கர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று கண்டறியப்பட்டது.

இதனால் அந்த மையத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.