விமான நிலையத்தில் கொரோனா பரவும் அபாயம்!

சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுண்டர்களில் குவிந்த பயணிகளால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் கொரோனா பரவும் அபாயம்!

சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுண்டர்களில் குவிந்த பயணிகளால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல்  இந்தியாவில் பன்னாட்டு விமான பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் மத்திய அரசு அனுமதி பெற்ற நாடுகளுக்கு மட்டும் விமான சேவை செயல்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளன. அதே போல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன் ஆர்டி-பிசிஆர் சோதனைகள் சான்றிதழ் காட்டினால் மட்டுமே இந்தியாவிற்கு வரும் விமானங்களில் அனுமதிக்கபடுகின்றனர். 

இந்த நிலையில் நேற்று தோகா, சார்ஜா மற்றும் துபாய் போன்ற நாடுகளில் இருந்து 4 விமானங்கள் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் வந்தன. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள குடியுரிமை கவுண்டர்களில் உள்ள அதிகாரிகளிடம் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சோதனை செய்ய வரிசையில் நின்றுள்ளனர். விமானங்களில் வந்த பயணிகளும் ஒரே நேரத்தில் குடியுரிமை சோதனை கவுண்டர்களுக்கு வந்ததால் அதிகப்படியான கூட்டம்  ஏற்பட்டது. கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகள் இல்லாமல் வரிசையில் நின்றதால் கொரோனா  பரவும் அச்சம்  ஏற்பட்டது. விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுண்டரில் ஒரே நேரத்தில் அதிகப்படியான பயணிகள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பயணி ஒருவர்  வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.  தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.