மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன்...ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த மறுவாழ்வு மைய உரிமையாளர்!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன்...ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த மறுவாழ்வு மைய உரிமையாளர்!

சென்னையை அடுத்த மாங்காடு அருகே  மன நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து துன்புறுத்திய மறுவாழ்வு மைய உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரணிபுத்தூர் பகுதியில் ரவிக்குமார் என்பவருக்கு சொந்தமான மறு வாழ்வு  மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட விருகம்பாக்கத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை பெற்றோர் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த சில நாட்களில் அங்கிருந்து தப்பிய சிறுவன், வீட்டிற்குச் சென்று, மறுவாழ்வு மையத்தில் தன்னை அடிப்பதாகவும், ஓரினச் சேர்க்கையில் தன்னை துன்புறுத்தியதாகவும் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதையும் படிக்க: “நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல்” நிச்சயம்...கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு!

காவல்துறையினர் மறுவாழ்வு மையம் சென்று நடத்திய விசாரணையில், சிறுவன் கூறிய அனைத்தும் உண்மை என்பது உறுதியானது. இதையடுத்து மையத்தின் உரிமையாளர் ரவிக்குமார், அவரது உதவியாளர்கள் கார்த்திக், ஜெகன் மற்றும் மோகன் ஆகியோரைக் கைது செய்தனர். அங்கிருந்தவர்கள்  வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு மறுவாழ்வு மையம் பூட்டப்பட்டது. காவல்துறையின் தொடர் விசாரணையில் மேலும் சிலர் இந்த மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளதையடுத்து அவர்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.