மாநில அளவிலான சிலம்பப் போட்டி...! பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துக்கொண்ட மாணவர்கள்..!

மாநில அளவிலான சிலம்பப் போட்டி...! பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துக்கொண்ட மாணவர்கள்..!

கோவை மேட்டுப்பாளையத்தில் மாநில அளவிலான தனித்திறன் சிலம்பப் போட்டி ஜெய் ஜீவா சிலம்பம் மல்யுத்த அகாடமி சார்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் 6 வயது முதல் 35 வயது வரை ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, தனித்திறமை, தனிச்சுற்று, வீச்சு முறை, வேல் கம்பு, சுருள் வாள், ஆகிய பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. நமது நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பத்தை பாதுகாத்து ஊக்குவிக்கும் வகையில் ஜெய் ஜீவா சிலம்பம் அகாடமி சார்பாக இந்த போட்டி நடைபெற்றது. 

இதில் கோவை, சேலம், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து 120 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சுழல் கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வனக்கல்லூரி முதல்வர் பார்த்திபன், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், மருத்துவர் சுதாகர், ஜெய் ஜீவா அகாடமி நிறுவனர் ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க : இன்றைய வானிலை அப்டேட்....! எந்தெந்த ஊர்களுக்கு எச்சரிக்கை...?