” காவிரி விவகாரத்தில் 21 ஆம் தேதி தமிழ்நாடு அரசு மேல்முறையிடு ” - அமைச்சர் துரைமுருகன்

” காவிரி விவகாரத்தில்     21 ஆம் தேதி தமிழ்நாடு அரசு  மேல்முறையிடு ” - அமைச்சர் துரைமுருகன்

கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் நிறுத்தியதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் வரும் 21ஆம் தேதி தமிழக அரசு  மேல்முறையிடு செய்யவுள்ளதாக மாநில நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் காட்பாடியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது . இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுச்செயலாளரும் மாநில நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுபினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், அணைக்கட்டு எம்.எல்,ஏவும் வேலூர் மாவட்ட செயலாளருமான ஏ.பி. நந்தகுமார் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் ஜி.வன்னியராஜா. காட்பாடி தெற்கு பகுதி செயலாளரும், துணை மேயருமான சுனில்குமார் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்:- 

” காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் காவிரி ஆற்றின் பாசன வசதி பெறும் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளாரே”  என  செய்தியாளர்கள் கேட்டதற்கு?

” காவிரியில் தண்ணீர் வழங்க மாட்டோம் என நாங்களா கூறினோம்? கர்நாடகா அரசு தண்ணீர் வழங்குவதை மறுக்கின்றது. கர்நாடகா அரசை கேட்டால் தண்ணீர் இல்லை என்று கூறுகிறார்கள். தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்று கூறுவது உச்சநீதிமன்றம். எனவேதான் வரும் 21 ஆம் தேதி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தன்னுடைய கருத்தை தெரிவிக்கும்”, என பதிலளித்தார்.

எடப்பாடி பழனிசாமி மீது 4,800 கோடி முறைகேடு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது  குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு.

அது குறித்து எனக்கு தெரியாது என கூறிய அமைச்சர் துரைமுருகன் தனது பாணியில் சிரித்தபடியே ஹ..ஹா..என கட்டை விரலை அசைத்து காட்டினார்.

குடிமராமத்து பணிகளை தமிழக அரசு கைவிட்டு விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு? 

குடிமராமத்து பணி என்றால் என்ன வென்றே எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது. என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்தார்.

இதையும்  படிக்க   | முருங்கை விலை வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை..!