தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து!!..

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  புத்தாண்டு வாழ்த்து!!..

இதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நன்னாளில், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும், வளங்களும் நிறைந்து, தமிழ்நாட்டு மக்கள் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளார். முதலமைச்சர் மு.கஸ்டாலின்  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் கண்டு வரும் பேரிடர்ச் சூழல், மனித குலத்திற்குப் பெரும் சவாலாக அமைந்தது என்று கூறியுள்ளார்.தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படுவதாக குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், எதிர்வரும் புத்தாண்டில் இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் பணிகளைத் தொடர்ந்திட தமிழக அரசு உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும் எனவும்  முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் மானுடத் தத்துவம் பாடிய பெருமைக்குரிய நமது தமிழகம் அனைத்துத் துறைகளிலும் செழித்திடவும் உலகில் வாழும் மக்கள் யாவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிடவும் விழைகிறேன் என்று கூறியுள்ள முதலமைச்சர்,உலகில் வாழும் மக்கள் யாவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிட வேண்டும். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று வாழ்த்தியுள்ளார்இதேபோன்று சமத்துவமும், சகோதரத்துவமும், சமூகநீதியும் தமிழகத்தில் முழுமையாக நிலைநிறுத்தப்படட்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருக்கிறார். கொரோனா, ஒமிக்ரான் உள்ளிட்ட நோய்களின் பிடியிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட்டு, ஆரோக்கியம் பெறவும், தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி பெறட்டும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கடந்த சில ஆண்டுகளாக, தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 2024 பொதுத்தேர்தலில், பாஜக அரசை அகற்றுவதற்கு வருகிற புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும் என்றும், தமிழக மக்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.