கடும் பொருளாதார நடவடிக்கை.. "12 தமிழக மீனவர்கள் கைது" உதவிக்கரம் நீட்டிய இந்திய மக்களையே வஞ்சிக்கும் இலங்கை அரசு!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடும் பொருளாதார நடவடிக்கை.. "12 தமிழக மீனவர்கள் கைது" உதவிக்கரம் நீட்டிய இந்திய மக்களையே வஞ்சிக்கும் இலங்கை அரசு!!

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களையும் கைது செய்து, ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தியா அண்மையில் பல்லாயிரம் கோடி கடன் மற்றும் 40 ஆயிரம் டன் டீசலை வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல் இலங்கை அரசு தொடர்ந்து மீனவர்களை கைது செய்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது..

பொருளாதார சரிவை சந்திக்கும் இலங்கையை காப்பற்ற துடிக்கும் மத்திய அரசு சொந்த நாட்டு மக்களை காப்பற்ற ஏன் தயக்கம் காட்டுகிறது என மீனவர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து இலங்கை கடற்படை இவ்வாறு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருவதை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.