கிளினிங் பவுடரை சாப்பிட்ட சிறுமி... அடையாளம் தெரியாமல் மாறிய சோகம்...

கிளினிங் பவுடரை சாப்பிட்ட சிறுமி.
கிளினிங் பவுடரை சாப்பிட்ட சிறுமி... அடையாளம் தெரியாமல் மாறிய சோகம்...
Published on
Updated on
1 min read
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூர் பகுதியில் வசித்து வருபவர் சீதாராஜ்.  இவருக்கு பிரேமா என்ற மனைவியும் 12 வயதில் தனம் என்ற பெண் குழந்தையும், 5 வயதில் இசக்கியம்மாள் என்ற பெண் குழந்தையும் உள்ளனர். சீதாராஜ், பிரேமா இருவரும் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.
இவர்களின் 2வது மகள் இசக்கியம்மாள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாள். அப்போது இருந்த வாஷிங் மிஷினை சுத்தம் செய்ய வைத்திருந்த கிளீனிங் பவுடரை சாப்பிடும் பொருள் என்று நினைத்து எடுத்து சாப்பிட்டு விட்டிருக்கிறார். அதை சாப்பிட்டவுடன் உணவு மற்றும் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் வலியால் அவதிப்பட்ட சிறுமியை  தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை செய்து, மேல் சிகிச்சைக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓரளவு குணமடைந்தவுடன் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார் இசக்கியம்மா.
மீண்டும் இசக்கியம்மாள் எதுவும் சாப்பிட முடியாமல் எடைகுறைந்து உடம்பு மெலிந்து வந்ததால் மீண்டும் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள், எவ்வளவோ முயற்சி செய்தும் சிறுமியின் உடல் நாளுக்கு நாள் மெலிந்து வருகிறது. செங்கோட்டை அரமசு மருத்துவமனையில் போதிய பலன் கிடைக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் சிறுமியின் நோய்க்கான சிகிச்சை அளித்து குணப்படுத்த நடவடிக்கை  வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com