சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காகவே அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல: - நடிகர் சூர்யா ஆவேசம்

சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காகத்தானே தவிர, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல என்று நடிகர் சூர்யா  ஆவேசம் தெரிவித்துள்ளார்.

சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காகவே அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல: - நடிகர் சூர்யா ஆவேசம்

ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவது தணிக்கை துறையின் இறையாண்மையை பறிக்கும் வகையில் உள்ளதாக தமது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா குறிப்பிட்டுள்ளார். புதிதாக சட்டம் இயற்ற மத்திய அரசு முயற்சி செய்வதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 

சினிமா தணிக்கை சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைக்கப்பட்ட 2 மாதத்தில் சட்டத் திருத்தம் செய்ய முயற்சி செய்வதை நாம் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், மத்திய அரசின் புதிய சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரை துறையினர் கருத்துக்களை பதிவிடக்கோரியும் அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும் ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.