மூணாறில் கணவன் மனைவியை தாக்கிய ஒற்றை யானை... 

மூணாறு அருகே மூலத்துரையில் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த கணவன் மனைவியை தாக்கிய ஒற்றையானை. மனைவி சம்பவ இடத்தில் பலி கணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூணாறில் கணவன் மனைவியை தாக்கிய ஒற்றை யானை... 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சட்ட மூணாறு பகுதியை சேர்ந்த குமார் விஜி தம்பதியினர் விசேஷத்திற்காக கரூர் சென்று  போடி மெட்டு வழியாக அதி காலை 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் மூணாறு சென்று கொண்டிருந்த பொழுது மூலத்துறை அருகே சாலையைக் கடக்கும் முயற்சித்த ஒற்றை காட்டு யானையை கண்டு வாகனத்தில் திருப்ப முயற்சித்துள்ளனர்.

யானையைக் கண்ட பதற்றத்தில் குமார்  வாகனத்தை கீழே விட்டு விட்டு ஓட முயற்சித்துள்ளனர் ஆனால் ஒற்றை காட்டு யானை இருவரையும் தப்பிக்க விடாமல் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த விஜி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த குமாரை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் மூணாறு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ச்சியாக பூப்பாறை மூணாறு சாலையில் ஒற்றை காட்டு யானையின் தாக்குதல் அதிகரித்து வருவதாலும் உயிர்பலி ஏற்படுவதாலும் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகளை துரத்த வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.