புதிய கல்வி கொள்கையை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது - பொன்முடி திட்டவட்டம்!

புதிய கல்வி கொள்கையை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது - பொன்முடி திட்டவட்டம்!

புதிய கல்வி கொள்கையில் ஏற்று கொள்ளத்தக்க விஷயங்கள் எதுவும் இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வி துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய மொடக்குறிச்சி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, தேசிய கல்வி கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் நவோதையா பள்ளிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 

இதற்கு பதில் அளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, புதிய கல்வி கொள்கையை முழுமையாக ஏற்று கொள்ள முடியாது என்றார். மேலும், புதிய கல்வி கொள்கையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதால், மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டார்.

இதையும் படிக்க : ரோகிணி தியேட்டர் விவகாரம்...கண்டனம் தெரிவித்த கமல், வெற்றி மாறன்...!

இதேபோல், பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, 26 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதில், வரும் கல்வி ஆண்டில் சுமார் 150 கோடியில் 7 ஆயிரத்து 500 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என அவர் அறிவித்தார்.

மேலும், 6 முதல் 8 வகுப்பு வரையில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டுள்ள நடுநிலைப் பள்ளிகளில், ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று என குறைந்த பட்சம் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த நிதியாண்டில் மட்டும் 40 ஆயிரத்து 230 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.