தொழிலதிபர் மார்ட்டின் வீட்டில் 5வது நாளாக தொடரும் சோதனை..!

தொழிலதிபர் மார்ட்டின் வீட்டில் 5வது நாளாக தொடரும் சோதனை..!

கோவை கவுண்டம்பாளையத்தில்  உள்ள தொழிலதிபர் மார்ட்டின் வீட்டில்  ஐந்தாவது  நாட்களாக  வருமானத்துறை  அதிகாரிகள்  சோதனை  மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை கவுண்டம்பாளையத்தில்  உள்ள தொழிலதிபர் மார்ட்டின் வீட்டில்  ஐந்தாவது நாளாக  வருமானத்துறை  அதிகாரிகள்  சோதனை  மேற்கொண்டு வருகின்றனர்.

2009 -ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரிகளை விதிகளை மீறி விற்று மார்ட்டின் 910 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியதாகவும்,  இதன் மூலம் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டாத பணம், நகைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடந்து 5 நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. 

இதையும் படிக்க   | குற்றச்செயல்களை தடுக்க, சென்னையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து!