ஃபார்வெல் பார்ட்டிக்கு பெர்மிஷன் கேட்ட மாணவி...! தகாத வார்த்தையால் திட்டியதால் தற்கொலை ....!

ஃபார்வெல் பார்ட்டிக்கு பெர்மிஷன்  கேட்ட மாணவி...! தகாத வார்த்தையால் திட்டியதால் தற்கொலை ....!
Published on
Updated on
2 min read

சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான கல்கி மான்ஃபோர்ட் ரங்கநாதன் பள்ளியில் சென்னை கொளத்தூரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகள் அர்ஷா என்பவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் பள்ளியின் முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிக்கு விடுமுறை விடப்படும் நேரத்தில் ஆஷா தனது சகத் தோழிகளுடன் ஃபேர்வெல் பார்ட்டி கொண்டாட முடிவு எடுத்து அதற்காக ஆசிரியரிடம் அனுமதி பெற்றதாக தெரிகிறது. இதனை அடுத்து பள்ளியின் ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை இதற்கான இந்த கொண்டாட்டத்திற்கான அனுமதியினை மறுத்து அர்ஸாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அர்ஸா அளவுக்கு அதிகமான மாத்திரைகளை விழுங்கி சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று  வீட்டுக்கு திரும்பினார். இந்த செய்தி  தொலைக்காட்சி  மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த செய்தி குறித்து தேசிய குழந்தைகள் மனித பெண்கள் நல வாரியத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தேசிய குழந்தைகள் மற்றும் பெண்கள் நல வாரிய உறுப்பினர் ஆனந்தகுமார் சம்பந்தப்பட்ட பள்ளியில் இன்று இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும், அந்த  பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் பள்ளியின் அலுவல் ஆசிரியை மற்றும் பள்ளியின் நிர்வாக இயக்குனர், தாளாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு அந்த விசாரணை அறிக்கையானது முழுமையாக பெறப்பட்டது.

இதனை அடுத்து இந்த விசாரணை அறிக்கையில் முழு உண்மை தகவல்களும் தேசிய குழந்தைகள் மற்றும் பெண்கள் நல வாரிய தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு இரண்டு நாட்களில் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்கப்படும் என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். 

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் கொளத்தூர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் பெற்றதாகவும், மேலும் இந்த சம்பவம் குறித்து தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நலனில் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தை பெரிதாக்க விரும்பவில்லை எனவும் எனவே பள்ளியின் நிர்வாகமும் நாங்களும் சமாதானமாக செல்வதாக கொளத்தூர் ராஜமங்கலம் உதவி ஆணையாளர் முன் இரு தரப்பினரும்,  எழுதிக் கொடுத்து புகார் வாபஸ் பெறப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் யாராலும் மிரட்டப்பட்டார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களை யாரும் மிரட்டவில்லை எனவும் அவருக்கு எந்தவித மிரட்டல் தொல்லைகள் கொடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் சுயமாகவே முடிவு எடுத்து இந்த புகாரினை வாபஸ் பெற்றதாகவும் கூறினார்.

ஆனால் தற்போது தேசிய குழந்தை மற்றும் பெண்கள் நல வாரியத்திடம் மீண்டும் ஒரு புகார் மனுவை அழித்துள்ளதாகவும் அந்த புகார் மனுவில் பள்ளியின் நிர்வாகம் மீதும் தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட தங்களது குழந்தைகளுக்கு ஒரு நல்ல தீர்வினை இந்த வாரியம் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவித்ததாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com