தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை - நாசர்

தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை - நாசர்

மதுரை ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு

மதுரை பால்பண்ணை அருகே அமைந்துள்ள ஆவின் பால் உற்பத்தி மையத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ச.மு.நாசர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
உற்பத்தி மையத்தில் பணியாற்றும் அதிகாரியிடம் ஆவின் பால் விநியோகம் அதனை அனுப்பி வைக்கும் வழிமுறைகள் அதில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளனவா உள்ளிட்டவை குறித்தும் கேட்டு அறிந்தார்.உடன் ஆவின் மேலாண் இயக்குநர் சுப்பையன், மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ்சேகர் உடன் உள்ளனர்.

மேலும் படிக்க | இந்திய இலங்கை மீனவர் பிரச்சனை - மார்ச்சில் பேச்சுவார்த்தை - எல்.முருகன்


தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை - பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேட்டி

வாகன விபத்து காரணமாக இன்று இரண்டு ரூட்டிற்கு வாகனங்கள் தாமதமாக சென்றதால் ஒருசில பகுதிகளில் விநியோகம் தாமதமானதுதூத்துக்குடி மாவட்டத்தில் நாள்தோறும் 26 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது.இந்த  தட்பவெப்ப சூழ்நிலையில் இந்தியா முழுவதுமே பரவலாக பால் கட்டுப்பாடு உள்ளது.நாளை முதல் பால் தட்டுப்பாடு இருக்காது சீராகிவிடும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | மார்ச் 28 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்