பைக்கில் கண்ணாடியை அகற்றினால் வாரண்டி இல்லை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால், வாகன விற்பனையாளர்கள் வாரண்டி கொடுக்க கூடாது என அறிவுறுத்துமாறு, தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
பைக்கில் கண்ணாடியை அகற்றினால் வாரண்டி இல்லை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Published on
Updated on
1 min read

இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால், வாகன விற்பனையாளர்கள் வாரண்டி கொடுக்க கூடாது என அறிவுறுத்துமாறு, தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இருசக்கர வாகனங்களில் பக்கவாட்டு கண்ணாடிகள் அகற்றப்படுவதால், விபத்துக்கள் அதிகரிப்பதாகக் கூறி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இதனை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. 

கண்ணாடியை அகற்றினால், வாரண்டி கிடையாது என நுகர்வோரை எச்சரிக்கும்படி, விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com