நடிகர் சூர்யா குடும்பத்தினருக்கு மிரட்டல்கள்... துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு...

ஜெய்பீம் படம் விவகாரத்தில் குடும்பத்தினருக்கு மிரட்டல்கள் வரும் நிலையில், நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா குடும்பத்தினருக்கு மிரட்டல்கள்... துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு...

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ஜெய் பீம் திரைப்படம் கடந்த 2-ம்தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில், ஒரு சமூகத்தினரை தவறாக சித்தரிக்கும் வகையில் சில காட்சிகள் அமைக்கப்பட்டதாக  விமர்சனம் எழுந்தது.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவிற்கு கேள்விகள் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சூர்யாவும் பதில் அளித்தார்.  இருந்தாலும், விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ஆயுதப்படையை சேர்ந்த 5 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.