கிடுகிடுவென அதிகரித்த தக்காளி விலை!!!

திருப்பூர் தென்னம் பாளையம் காய்கறி சந்தையில் வரத்து குறைவு காரணமாக 15 கிலோ தக்காளி பெட்டி 500 ரூபாய் வரை விற்பனை. சில்லறை வர்த்தகத்தில் 40 ரூபாய் வரை விற்பனை.

கிடுகிடுவென அதிகரித்த தக்காளி விலை!!!

ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது. இந்த பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் திருப்பூர் தென்னம் பாளையம் காய்கறி சந்தையில் தினந்தோறும் 12 டன் வரத்து இருந்த நிலையில் தக்காளி வரத்து 6 டன் என பாதியாக குறைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டுமே தக்காளி வரத்து உள்ளதாகவும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு 100 ரூபாய் என விற்பனையாகி வந்த 15 கிலோ தக்காளி பெட்டி தற்போது 500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தரத்தின் அடிப்படையில் 15 கிலோ பெட்டி 150 முதல் விற்பனை செய்யப்படுகிறது எனவும் சில்லறை வர்த்தகத்தில் கிலோ தக்காளி 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.