கல்வித்துறையில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும்... காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்...

கல்வித்துறையில் காஞ்சிபுரம் மாவட்டம் முதல் இடத்தை பிடிக்க கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் துணை நிற்க  மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி வேண்டுகோள் விடுப்பு.

கல்வித்துறையில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும்... காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்...

செப்டம்பர் 5 ஆசிரியர்கள் தினவிழாவை  முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட கல்விதுறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு  மையக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்வித்துறையில்  சிறப்பாக பணியாற்றிய  சந்தவேலூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியின்  தலைமை ஆசிரியர் ராஜ்குமார், மாத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் யுவராணி உள்ளிட்ட 9 ஆசிரியர்களுக்கு  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, தலா 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும்  சான்றிதழ்களை  மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்.பி  ஜி.செல்வம் உத்திரமேரூர் எம்.எல். ஏ க.சுந்தர் ஆகியோர்  வழங்கினர். மேலும் இந்நிகழ்வின் போது  காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி பேசுகையில்,

தங்கள் குழந்தைகளை பத்திரமாக பாரத்துக் கொள்வதாலும் நல்ல ஒழுகங்களை கற்று கொள்வதாலும் தான் நாம் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றோம், தமிழகத்தில் கல்வி துறையில்  சிறந்த மாவட்டமாக முதல் இடத்ததை  காஞ்சிபுரம் மாவட்டம் பிடிக்க வேண்டும், அதற்க்கு  மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் துணை நிற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.