குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்...படகு சவாரி  இல்லாததால் ஏமாற்றம்!

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்...படகு சவாரி  இல்லாததால் ஏமாற்றம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் படகு சவாரி  இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடர் விடுமுறையை ஒட்டி உள்ளுர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்து வருகின்றனர்.

இதையும் படிக்க : திருச்சி மாநாட்டிற்கு சசிகலா, டிடிவிக்கு அழைப்பு...ஓபிஎஸ் பரபர பேட்டி!

தோட்டக்கலை பணியாளர்களின், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்  அடைந்தனர். மேலும் மலை ரயில் பயணம் செய்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணித்து மகிழ்ந்தனர்.