மக்களவை நிறைவேறிய மசோதா: வரவேற்று ட்வீட் செய்த முதலமைச்சர்!

மக்களவை நிறைவேறிய மசோதா: வரவேற்று ட்வீட் செய்த முதலமைச்சர்!

நாடாளுமன்றத்தில் பழங்குடியினர் திருத்த மசோஹா நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

முதலமமைச்சர் கடிதம்:

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர்  பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களைப் பெறத் தகுதியுடையவர்களாக மாறுவார்கள் என்பதை கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டி இருந்தார்.

நன்மைகள்:

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவதால்,

* மத்திய அரசின் நலத் திட்டங்கள் 
* மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய கல்வி உதவித்தொகை
* வெளிநாடுகளில் படிக்க தேசிய கல்வி உதவித்தொகை 
* சலுகை கடன்கள் 
* கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட அதிகப்படியான நன்மைகளை பெற முடியும்.

ஒப்புதல் அளித்த பிரதமர்:

இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மசோதா நிறைவேற்றம்:

இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

சட்டமாவது எப்படி:

தொடர்ந்து, இதே மசோதா மாநிலங்களவையிலும்  கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின் அரசாணை வெளியிடப்பட்டு சட்டமாக நடைமுறை படுத்தப்படும். 

மு.க.ஸ்டாலின் ட்வீட்:

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறிய மசோதாவை வரவேற்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியதை சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர்,  மசோதா நிறைவேறியதற்கு நன்றி தெரிவித்ததோடு, இரு சமூகத்தினரும் கண்ணியமாக வாழ திமுக என்றும் துணைநிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com