யார் ஆட்சியில் கல்வி வளர்ச்சி பெற்றது...?அமைச்சர் பொன்முடி - கே.பி. முனுசாமி இடையே வாதம் !

யார் ஆட்சியில் கல்வி வளர்ச்சி பெற்றது...?அமைச்சர் பொன்முடி - கே.பி. முனுசாமி இடையே வாதம் !

தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் கல்வி வளர்ச்சி பெற்றது என்பது குறித்து, சட்டப்பேரவையில், அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி. முனுசாமிக்கும், அமைச்சர் பொன்முடிக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. 

தமிழ்நாடு சட்டமன்றத்தில், கேள்வி-பதில் நேரத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி. முனுசாமி, தமிழ்நாட்டில், 35 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில்தான் கல்வி மேம்பட்டது என்று கூறினார். 

இதையும் படிக்க : டாஸ்மாக் மூலம் மட்டுமே அரசு நடைபெறவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

அதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் கல்வி வளர்ச்சி என்பது திமுக ஆட்சியில் தானே தவிர, அதிமுக ஆட்சியில் இல்லை என்று கூறினார். இதனால் சட்டபேரவையில் இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.