பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு... 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

ஆந்திர மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளில் இருந்து தொடர்ந்து அதிகளவு உபரிநீர் திறந்து விடப்படுவதால் ஆறு கடல் போல காட்சியளிக்கிறது.

பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு... 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தடுப்பணையில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரம் உள்ள சாதம்பாக்கம், திருமலைச்சேரி, பூண்டி, சுமைதாங்கி உள்ளிட்ட 30க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல பொன்னை அணைக்கட்டு தடுப்பணையிலிருந்து  65 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் 2 மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரம் உள்ள 27 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையினால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையிலிருந்து 65 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மூவாயிரத்து 60 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகளால் ஒசூர் - பேரிகை தரைப்பாலத்தில் மலைபோல நுரை சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் தரைப்பாலத்தை கடக்காதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.