மழைநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கும் சுங்கச்சாவடி....

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி மழைநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது.
மழைநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கும் சுங்கச்சாவடி....

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து இந்த சுங்கச்சாவடியை பயன்படுத்திதான் வடமாநிலங்களுக்கு கனரக வாகனங்கள சென்று வருகின்றன.

தினந்தோறும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியை கடந்து சென்று வருகின்றன எனபது குறிப்பிடதக்கது. வடமாநிலங்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் இங்கு பதிவு செய்து விட்டுதான் சென்னை வழியாக மற்ற மாவட்டங்களுக்கு  செல்ல முடியும்..! 

இதற்கிடையில் சமீபத்தில் பெய்து வரும் தொடர் கன மழையால் சுங்கச்சாவடி மழைநீரால்  மிதக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஓட்டிகள் அதிலும் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இவ்வழியாக ஏராளமான அரசு அதிகாரிகளின் வாகனங்கள் சென்று வருகிறது. இருப்பினும், மழைநீ்ர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் இந்த சுங்கச்சாபடி அதிகாரிகளின் கண்களுக்கு புலப்படாமல் இருப்பது புரியாத புதிராக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

கண்டும் காணாத அரசு அதிகாரிகளின்  செயலால் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது என்பதையும் பொதுமக்கள்  அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். எனவே 

விஜயநல்லூர் சுங்கச்சாவடி அருகில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com