சுதந்திர தினத்தை புறக்கணித்த கிராம மக்கள்...வீடுகளில் கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பு!

சுதந்திர தினத்தை புறக்கணித்த கிராம மக்கள்...வீடுகளில் கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பு!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சுதந்திர தின விழாவை புறக்கணித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் வீடுகள் முழுவதும் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நாட்டின் 77வது சுதந்திர தின விழாவை புறக்கணித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமலும்,  கிராமம் முழுவதும் தெருக்களில் கறுப்பு கொடி தோரணம் கட்டி, வீடுகள் தோறும் கறுப்பு கொடியை ஏற்றி வைத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதையும் படிக்க : "சீரழிந்து வரும் மருத்துவத்துறை" குற்றம் சாட்டும் எடப்பாடி!

மேலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை, கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.