"பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு சாபக்கேடு" - அண்ணாமலை

பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விற்பனையை தமிழ்நாடு அரசு நிறுத்தக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

மதுரையில் நடைபெற்ற தொழில்முனைவோர் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமுல் நிறுவனம் இந்தியாவின் மாடலாக உள்ளதாக குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தக் காரணம் என்ன?  அண்ணாமலை வினவினார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு சாபக்கேடு எனவும் விமர்சித்தார். ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடப்பதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

இதையும் படிக்க : ராஜஸ்தான் : நண்பகல் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்...!

மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தால் தமிழ்நாடு அரசு நிர்வாகம் முடங்கி விடுமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். உண்டியல் பணத்தை கொண்டு அந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தி திமுகவினர் மக்களை ஏமாற்றி வருவதாக சாடிய அவர், எத்தனை கோயில்களை அறநிலையத்துறை கட்டி உள்ளது என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.