புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குமா? என்பதை மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் ...

இந்த ஆண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குமா? என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால் உடனுக்குடன் தடுப்பூசிகளை அதிகளவில் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன், இந்த ஆண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குமா? என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும்  தெரிவித்தார்.