ஒருங்கிணைந்த மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் செயற்குழு கூட்டம்..; தீர்மானங்கள் நிறைவேற்றம்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைப்பெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் செயற்குழு கூட்டத்தில் சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் ஆகியவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கவுண்டம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் செயற்குழு கூட்டம் இந்து முன்னணி மாநில செயலாளர் தாமு. வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுதந்திர தினத்தன்று சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் குறைந்தபட்சம் 250 வீடுகளில் தேசிய கொடியேற்றி, பறக்க விட செய்ய வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில் சேலம் மாவட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக செல்ல வேண்டும் என்றும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இதை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த மாநில இந்து முன்னணி செயலாளர் தாமு. வெங்கடேஸ்வரன், வருகிற 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்து முன்னணி  கிளையின் சார்பில் 250 வீடுகளில் தேசிய கொடி ஏற்றி மூன்று நாட்களுக்கு பறக்க விட செய்ய வேண்டும் எனவும் அதேபோல் 35 வது விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் இரண்டாம் தேதி வரை மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் பெரியார் சிலை சம்மந்தமாக ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேச்சுக்கு இந்து முன்னணி ஆதரவு தெரிவிப்பதாகவும் பேசியுள்ளார். அப்போது எடப்பாடி கோட்ட செயலாளர் பழனிசாமி, கோட்டத் தலைவர் சந்தோஷ், மேற்கு மாவட்ட செயலாளர் கோபிநாத் ஆகிய இந்து முன்னணி அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.