கொடிவேரி அணையில் விடுமுறை தினத்தை ஒட்டி...... ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை...!

கொடிவேரி அணையில் விடுமுறை தினத்தை ஒட்டி...... ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை...!

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்..

ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றானது கொடிவேரி அணை. இந்த அணைக்கு பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தடுப்பணையில் அருவி போல கொட்டும். இந்த தடுப்பணையில் அருவிபோல கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வதற்க்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை,  திருப்பூர்,  கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். மேலும் முக்கிய தினங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 105 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கொடிவேரி உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.  

இதே போல் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயனிகள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இன்று காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக அதிகளவில் வர தொடங்கினர். ஆனால் நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் கொடிவேரி தடுப்பணை பகுதியில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது. இதையொட்டி கொடிவேரி பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து போலீசார் தடுப்பணையில் குளிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் குளிக்க வேண்டும் என்று எச்சரித்து கண்காணித்தும் வருகின்றனர். குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை தடுப்பணையின் வெளிபகுதியில் அமர்ந்து உண்டும், அங்கு விற்பணை செய்யப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டும் மகிழ்ந்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com