பாஜகவின் கொள்கை பிடிக்கவில்லை எனக்கூறி அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி கருத்து தொிவித்துள்ளாா்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில், சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய கே.எஸ்.அழகிாி பாஜகவின் கொள்கை பிடிக்கவில்லை எனக்கூறி அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என தொிவித்தாா். மேலும் அதிமுக - பாஜக கூட்டணி முறிவை இரண்டு தனி மனிதா்களுக்கு இடையேயான பிரச்னையாக பாா்ப்பதாக கூறினாா்.
தொடா்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் திருமாவளவன் பேசுகையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றாா்.
இதில் மதிமுக தலைவர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவ முத்தரசன், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்று பேசினா்.
இதையும் படிக்க: உலகின் மிக பெரிய இந்து கோயில் அக்டோபரில் திறப்பு..!